53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
தோனி மற்றும் கோலியை குறித்த யாரும் அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள் - மனம்திறந்த கவாஸ்கர்!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வீரர்களான தோனி மற்றும் விராட் கோலி குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவலினை இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் பகிர்ந்துள்ளார்.
சாதாரண குடும்பத்தில் பிறந்து பல இன்னல்களை தாண்டி இந்திய அணியில் பல சாதனைகளை நிகழ்த்தியவர் தோனி என்பது அனைவரும் அறிந்ததே. ரசிகர்கள் அதிகமாக தோனியை மைதானத்தில் மட்டுமே பார்த்திருக்க முடியும்.
தோனி மைதானத்தில் எப்படி அமைதியுடனும் அன்புடனும் நடந்துகொள்கிறாரோ நிஜ வாழ்க்கையிலும் அப்படியே தான் இருப்பார் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார். உதாரணமாக இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க விமானத்தில் பயணம் செய்யும் போது அணியின் கேப்டன் மற்றும் முக்கியமானவர்களுக்கு பிஸினஸ் க்ளாஸில் சீட் ஒதுக்குவது வழக்கம்.
ஆனால் தோனி எப்போதும் அந்த பிஸினஸ் க்ளாஸில் அமரமாட்டாராம். அதே விமானத்தில் பயணம் செய்யும் டிவி ஒளிபரப்பு ஊழியர்கள், இன்ஜினியர்களுடன் எக்கனாமிக் க்ளாஸில் தான் பயணம் செய்வாராம்.
தற்போது அதே போல் விராட் கோலியும் தனக்கு ஒதுக்கப்படும் பிஸினஸ் க்ளாஸ் சீட்டினை கடந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய பந்துவீச்சாளருக்கு கொடுத்துவிட்டு அவர் எக்கனாமிக் கிளாஸில் அமர்ந்து பயணம் செய்வாராம். இந்த தகவலினை இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் பகிர்ந்துள்ளார்.