மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இறுதிப் போட்டிக்கு வந்துட்டு பேசுவோம் நாங்க; மும்பை ரசிகருக்கு பதிலடி கொடுத்த பிரபல தமிழ் நடிகை; யார் தெரியுமா?
ஐபிஎல் சீசன் 12 இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் ஒரு சில போட்டிகளே மீதமுள்ள நிலையில் எந்த அணி இந்த சீசனில் சாம்பியன் பட்டத்தை வெல்லப் போகிறது என்று தெரிந்துவிடும். ப்ளே ஆப் சுற்றுக்கு மும்பை, சென்னை, டெல்லி, ஐதராபாத் அணிகள் தகுதி பெற்றன.
இந்நிலையில், முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகளான மும்பை, சென்னை அணிகளுக்கு இடையே பிளே ஆப் சுற்றில் குவாலிபயர்-1 நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. சிஎஸ்கேவின் சொந்த மண்ணில் இப்போட்டி நடைபெற்றதால் சென்னை அணி வெற்றி பெறும் என்ற ஆவலோடு ரசிகர்கள் காத்திருந்தனர்.
ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக இப்போட்டியில் சென்னை அணி மும்பை அணியிடம் பரிதாபமான தோல்வியை தழுவியது. இதனால் குவாலிபயர்-2 போட்டியில் ஆடி வெற்றி பெற்றால்தான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்ற இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் மும்பை அணியிடம், சென்னை சூப்பா் கிங்ஸ் தோல்வியுற்றது குறித்து ரசிகா் ஒருவா் ட்விட்டரில் பதிவிட்டிருந்த கருத்தில், “கிளம்பு கிளம்பு, ஃபைனலுக்கு வந்தாலும் அடி தான் வாங்க போறீங்க” என்று பதிவிட்டிருந்தார்.
Ada Pavi.. Tamizh pesra.. thalapathy surya nu soldra.. MI ya nee.. final vanthuttu pesuvom nanga. Athu varaikum neenga sathama pesikonga https://t.co/eVFaESNdeR
— Vijayalakshmi A (@vgyalakshmi) May 7, 2019
இதற்கு பதில் அளித்துள்ள நடிகை விஜயலட்சுமி, “ட பாவி, தமிழ் பேசுற, தளபதி சூர்யான்னு சொல்ற. மும்பை இண்டியன்ஸ் ரசிகரா. ஃபைனலுக்கு வந்துட்டு பேசுவோம் நாங்க. அதுவரைக்கும் நீங்க சத்தமா பேசிகோங்க” என்று பதிலடி கொடுத்துள்ளார்.