மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தல தோனியின் மாஸ்டர் பிளான் ரசலின் ரனகளத்தை கட்டுப்படுத்துமா? இன்று பலப்பரீட்சை.!
ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. 22 போட்டிகள் முடிவு பெற்றுள்ள நிலையில் சென்னை, கொல்கத்தா அணிகள் மோதும் 23 வது போட்டி சென்னை அணியின் சொந்த மண்ணில் நடைபெற உள்ளது. இதுவரை நடைபெற்ற 22 போட்டிகளில் கொல்கத்தா, சென்னை, பஞ்சாப் மற்றும் கைதராபாத் அணிகள் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தில் உள்ளது.
கொல்கத்தா மற்றும் சென்னை அணி தலா நான்கு போட்டிகளில் வெற்றிபெற்று முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி முதல் இடத்தை தக்கவைக்கும்.
சென்னை அணியை பொறுத்தவரையில், தோனியின் சிறப்பான தலைமையால் தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது. அதே போல கொல்கத்தா அணிக்கு ரசல் எதிரணி பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார். இவர் இன்றும் தனது அதிரடியை தொடரலாம்.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கிறிஸ் கெயிலை விரைவாக ஆட்டமிழக்கச் செய்தது போல் ரசலுக்கும் தனி வியூகம் அமைத்து ஆட்டமிழக்க செய்வது மிக அவசியம். அவ்வாறு அமைந்தால் சென்னை அணி வெற்றி பெறுவது மிக எளிதாக அமையும். சென்னை அணி முதலில் பேட்டிங் செய்த எல்லா போட்டியிலும் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்துகிறது . அதே நேரம் கொல்கத்தா அணி இரண்டாவதாக பேட்டிங் செய்த 3 போட்டியில் வெற்றி நடையை தொடர்கிறது.