53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
முதல் வெற்றியை பதிவு செய்வது யார்? ராஜஸ்தான்-ஹைதராபாத் அணிகளுக்கிடையே இன்று நடக்கும் பல பரிட்சை.!
இன்றைய போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், சன் ரைஸர்ஸ் ஹைதெராபாத் அணிக்கும் இடையே நடைபெறுகிறது. இரு அணிகளுமே தங்களது முதல் ஆட்டத்தில் தோல்வியை தழுவின. இன்றைய போட்டியில் எந்த அணி முதல் வெற்றியை பதிவு செய்யும் என்பதை பார்க்க அனைவரும் எதிர்பார்ப்பில் இருப்பீர்கள்.
சன் ரைஸர்ஸ் ஹைதெராபாத் அணி முதல் ஆட்டத்தில் கொல்கத்தா அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. கொல்கத்தா அணியின் ரஸ்ஸல் மற்றும் கில் கடைசியில் ஆடிய அதிரடி ஆட்டத்தால் சன் ரைஸர்ஸ் ஹைதெராபாத் அணி தோல்வியை தழுவியது. இன்றைய போட்டியில் அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் அணிக்கு திரும்பியுள்ளது கூடுதல் பலமாக உள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அஸ்வின், பட்லரை அவுட்டாகிய மங்கட் முறை பெரும் விமர்சனத்திற்கு உள்ளது. மேலும் ஆட்டத்தின் திருப்புமுனையாகவும் அது அமைந்துவிட்டது. இன்றைய போட்டியில் இந்த அணியின் ஸ்டிவ் ஸ்மித் ஆடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு முதல் போட்டியில் தோல்வியுற்ற இவ்விரண்டு அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இதனால் இப்போட்டியை காண ரசிகர்கள் மிகவும் உற்சாகமாகவே உள்ளனர்.
Hyderabad XI:
டேவிட் வார்னர், ஜானி பெயர்ஸ்டோவ், கேன் வில்லியம்சன், மனிஷ் பாண்டே, விஜய் ஷங்கர், யூசுப் பதான், ரஷீத் கான், புவனேஷ் குமார், ஷாபாஸ் நதீம், சந்தீப் சர்மா, சிதார்த் கவுல்
Rajasthan XI:
ஜோஸ் பட்லர், ரஹானே, சஞ்சு சாம்சன், ஸ்டீவன் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், ராகுல் திரிபாதி, க்ரிஷ்ணப்பா கெளதம், ஷ்ரேயஸ் கோபால், ஜோப்பிர ஆர்ச்சர், உனட்கட், தவல் குல்கர்னி
ராஜஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது!!
சபாஷ்!