சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்! ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? தடைசெய்யப்படுமா? கங்குலி பரபரப்பு விளக்கம்!
சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் இதனால் உலகளவில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இத்தகைய கொடூர கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ளது.
இந்த வைரஸால் இந்தியாவில் 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில் சுகாதாரக் குழு மற்றும் மற்றும் மத்திய மாநில அரசுகள் கொரோனோ விழிப்புணர்வு குறித்தும், சிகிச்சை நடவடிக்கைகளையும் அதிதீவிரப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் 13வது ஐபிஎல் போட்டி மார்ச் 29ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் மும்பை அணியும், சென்னை அணியும் மோத உள்ளது. இவ்வாறு ஐபிஎல் போட்டிகளை ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா அல்லது தடை செய்யப்படுமா என பெரும் சந்தேகம் எழுந்து வந்தது.
இந்நிலையில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இதுகுறித்து கூறுகையில், ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்டபடி கண்டிப்பாக நடக்கும். போட்டியை தள்ளி வைக்கும் எண்ணம் எதுவும் இல்லை. மேலும் இந்த போட்டியுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும் போட்டியின்போது கொரோனா வைரஸ் தாக்குதல் இன்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதுகுறித்து மருத்துவ குழு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.