தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்ட் கிங் அணியிலிருந்து வெளியேறுகிறார்! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!
"ஸ்விங் கிங்" என்று ரசிகர்கள் மற்றும் விளையாட்டுத் துறையினரால் புகழப்பட்டவர் இர்ஃபான் பதான். இவர் இந்தியா கிரிக்கெட் விளையாட்டை அதிகாரப்பூர்வாமக ஒளிபரப்பு செய்யும் நிகழ்ச்சியில் இர்ஃபான் பதான் பங்கேற்றார்.
அப்போது அனைத்து வகையான ஆட்டங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 35 வயது ஆன இவர் கடைசியாக கடந்த 2019 ஆண்டு பிப்ரவரி மாதம் ஜம்மு-காஷ்மீருக்கான சையத் முஷ்டாக் அலி கிண்ணத்திற்கான போட்டியில் கலந்து கொண்டு விளையாடி இருந்தார்.
இந்திய கிர்க்கெட் அணியின் ஆல் ரவுண்டராக திகழ்ந்த இர்ஃபான் பதானுக்கு, கடந்த 2003 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியே முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியாகும். அந்த போட்டியிலேயே அவரது பவுலிங் அனைவராலும் பெரிதும் பேசப்பட்டது.
தொடர்ந்து பல போட்டிகளில் பேட்ஸ்மேனாகவும் பவுலராகவும் சிறப்பாக விளையாடி 2007 ஆம் டி20 உலக கோப்பையை இந்தியா வெற்றி பெறுவதற்கு பெரிதும் உறுதுணையாக இருந்தார்.
சுமார் 15 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். 120 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 173 விக்கெட், 29 டெஸ்ட்டில் 100 விக்கெட் மற்றும் 24 டி20 போட்டிகளில் 28 விக்கெட் சாய்த்துள்ளார்.
ஓய்வு குறித்து பேசிய இர்ஃபான்,“நான் அனைத்து வகையான கிரிக்கெட் ஆட்டத்தில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன். சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட் மற்றும் வி.வி.எஸ் லக்ஷ்மண் போன்ற வீரர்கள் உடனும் டிரெஸ்ஸிங் ரூமை பகிர்ந்து கொண்டது எனக்குப் பெரிய அதிர்ஷ்டம் என கூறியுள்ளார்.