53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
கோலியின் ராசி குறைந்துவிட்டதா! ஒருவேளை அனுஷ்கா சர்மாவின் இந்த மாற்றம் தான் காரணமா இருக்குமோ!
இந்தியா மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளின் கேப்டனாக விராட் கோலி இருந்து வருகிறார். 2019 ஆம் ஆண்டு துவங்கி கோலிக்கு பெரிய அளவில் எந்த வெற்றியும் கிடைக்கவில்லை. நேற்று கூட மும்பை அணியிடம் பரிதாபமாக தோற்றார்.
கோலிக்கு மட்டுமல்ல அவரது மனைவி அனுஷ்கா சர்மாவிற்கும் சமீபத்தில் பெரிய அளவில் எந்த வெற்றியும் கிடைக்கவில்லை. ஷாருக்கான் உடன் நடித்து வெளியான ஜீரோ படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை. அவரும் பெரிய ஏமாற்றத்தில் தான் உள்ளார்.
கோலிக்கும் ஆஸ்திரேலியா தொடர் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆஸ்திரேலியாவுடனான T20 மற்றும் ஒருநாள் தொடரை இந்தியா இழந்தது. உலககோப்பை நெருங்கும் நேரத்தில் இந்த தோல்வியால், கோலி மீது பலருக்கும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. கேப்டனாக முதல்முறையாக கோலி இந்திய மண்ணில் தொடரை இழந்தார்.
கோலியின் ராசி குறைந்துகொண்டே செல்கிறதாக ஆங்காங்கே பேச்சும் அடிபடுகிறது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரிலாவது தனது பழைய ராசியை மீட்டெடுப்பார் என நினைத்தால், நேற்றைய மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் அவருடைய ராசி இந்த உலகத்திற்கே தெரிந்துவிட்டது.
தலைசிறந்த பேட்ஸ்மேனான டிவில்லியர்ஸ் கடைசிவரை களத்தில் நின்று கூட பெங்களூரு அணியால் வெல்ல முடியவில்லை. போதாததிற்கு அம்பயரின் கவனக்குறைவால் நோபால் சரியாக கவனிக்கப்படாமல் கோலியை மேலும் சோதனைக்கு உள்ளாக்கியுள்ளது.
கோலியின் இந்த சரிவிற்கு அவரது ராசி குறைந்து வருவது தான் காரணம் என பலர் கருத்து தெரிவிக்கின்றனர். அதிலும், அவருடைய ராசி குறைவதற்கு அவரின் மனைவி அனுஷ்கா சர்மா தனது சொந்த வாழ்க்கையில் செய்துள்ள மாற்றங்கள் தான் காரணம் எனவும் முனுமுனக்க துவங்கிவிட்டனர். அப்படி என்ன மாற்றத்தை செய்துவிட்டார் அனுஷ்கா என யோசிக்கிறீர்களா!
பெருசா ஒன்னும் இல்லைங்க, அவர்கள் கூறும் காரணமும் நம்பும் படியா இல்லை தான். இருந்தாலும், இப்புடியும் இருக்குமோ என நம்மையும் யோசிக்க வைக்கிறது. ஒன்னுமில்லைங்க, முன்னாடியெல்லாம் அனுஷ்கா சர்மா பொது இடங்களிலும் கவர்ச்சியாக உடையணிந்து தான் வருவாராம். ஆனால் இப்போதெல்லாம் முழு குடும்ப பெண்ணாக மாறி உடல் முழுவதும் மறைக்கும்படி தான் உடையணிந்து வருகிறாராம்.
மேலும் முன்னாடி போல அனுஷ்கா, கோலி விளையாடும் ஆட்டங்களை பார்ப்பதற்கு மைதானத்திற்கு நேரில் வருவதில்லையாம். அனுஷ்கா மைதானத்தில் அமர்ந்திருப்பதும்,ஆட்டக்களத்தில் இருந்து கோலி அவருக்கு செய்கை கொடுப்பதும் என எந்த சீனும் சமீபத்தில் நடக்கவில்லையாம். இதனால் தான் கோலிக்கு ராசி குறைந்து வருகிறது என கூறுகின்றனர்.
ஜீரோ படத்திற்கு பிறகு அனுஷ்கா எந்த படத்திலும் நடிக்கவில்லை. வீட்டில் சும்மா இருந்த தயவு செய்து மைதானத்திற்கு வந்து கோலியை மீட்டுத்தருமாறு ரசிகர்கள் வேண்டுகோள் வைக்க துவங்கிவிட்டனர். குறிப்பா உலககோப்பை தொடரில் அனுஷ்காவிற்கென ஒரு சீட்டை இப்பவே புக் செய்யுமாறும் கேட்டு வருகின்றனர்.