மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இன்னா... இப்போ.! போயிட்டு பந்தை ஒழுங்கா போடு! களத்தில் மோதி கொண்ட இஷான் கிஷன் - சாம்சி.! வைரல் வீடியோ.!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது.
இதனையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷன் இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்து இருவரும் அரைசதம் அடித்தனர்.
— Guess Karo (@KuchNahiUkhada) June 14, 2022
நேற்றய போட்டியில், 9ஆவது ஓவரை வீச வந்த தென்ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் சாம்சிக்கும், இஷான் கிஷனுக்கும் இடையில் களத்தில் மோதல் ஏற்பட்டது. அந்த ஓவரின் 4ஆவது பந்தில் இஷான் சிக்ஸர் அடித்ததால், சாம்சி கோபத்துடன் காணப்பட்டார். இதனையடுத்து அடுத்த பந்தை சாம்சி புல் டாஸாக வீசிய நிலையில், அந்த பந்தையும் ஓங்கி அடித்தார். அப்போது இஷான் கிஷனிடம் வந்த சாம்சி, ஏதோ சொல்ல கோபத்தில் இஷான் கிஷன், போட்டு பந்தை ஒழுங்கா போடு என்ற தோரணையில் ஆக்ரோஷமாக சொல்லிவிட்டு சென்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.