53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
தெருவில் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடிய பிரபல கிரிக்கெட் வீரர்! வீடியோ உள்ளே
இங்கிலாந்தின் முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன், தான் சிறுவர்களுடன் தெருவில் கல்லி கிரிக்கெட் விளையாடிய வீடியோவை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கல்லி கிரிக்கெட் என்பது பெரும்பாலும் ஆசிய நாடுகளான இந்தியா, பாக்கிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசத்தில் விளையாடக்கூடியது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த முறை கிரிக்கெட்டை விரும்பி விளையாடுவர்.
வழக்கமான கிரிக்கெட் விளையாடுவதற்கு பெரிய மைதானம் தேவைப்படும். ஆனால் எல்லோருக்கும் இது எளிதில் வாய்த்துவிடாது. இதனால் கிடைக்கும் இடத்தில் அதற்கேற்றார் போல் ஆட்களை சேர்த்துக்கொண்டு, தங்களுக்கென புதிய விதிமுறைகளை அமைத்துக் கொண்டு விளையாடுவதற்கு பெயர் தான் கல்லி கிரிக்கெட்.
தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக செயல்பட்டு வரும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன், பெங்களூருவில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு சென்றுள்ளார்.
அங்கு ஒரு தெருவில் சிறுவர்கள் கல்லி கிரிக்கெட் விளையாடியதை பார்த்த பீட்டர்சன் அவர்களோடு தானும் சேர்ந்து ஆடத் துவங்கியுள்ளார். பீட்டர்சன் பேட்டிங் பிடிக்கும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிரந்துள்ள அவர், "கல்லி கிரிக்கெட் விளையாடுவதில் நான் சிறந்தவன் அல்ல" என கூறியுள்ளார்.
I wasn’t very good...! 😂 #GullyCricket pic.twitter.com/IrYY63PonJ
— Kevin Pietersen🦏 (@KP24) March 28, 2019