மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தரவரிசையில் விட்டுக்கொடுக்காத விராட், ரோகித்; வெளியானது ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியல்!
சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கான ஒருநாள் தொடர் முடிவடைந்ததையொட்டி ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 871 புள்ளிகளுடன் முதலிடத்திலும் ரோகித் சர்மா 855 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் பாபர் அசாம், ராஸ் டெய்லர் மற்றும் டூப்ளஸிஸ் உள்ளனர்.
பந்துவீச்சாளர்களில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ட்ரென்ட் போல்ட் முதலிடத்திலும், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இரண்டாம் இடத்திலும் உள்ளனர். அடுத்த 3 இடங்களில் முஜீப் உர் ரஹ்மான், பாட் கம்மின்ஸ் மற்றும் ரபடா ஆகியோர் உள்ளனர்.