தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
ரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்த கிங் கோலி: அதிக சதம் அடித்தவர்கள் வரிசையில் 2 வது இடத்திற்கு முன்னேற்றம்..!
ஆசிய கோப்பை டி-20 போட்டி தொடர் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று ஆப்கானிஸ்தான் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது.
இந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய விராட் கோலி அதிரடி சதம் அடித்து அசத்தினார். இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, கடந்த சில போட்டிகளில் ரன் குவிக்க முடியாமல் திணறி வந்தது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக பல்வேறு விமர்சனங்களுக்கும் ஆளானார். எனினும், அவரது ரசிகர்கள் கோலி மீண்டும் பழைய பார்முக்கு திரும்புவார் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.
விராட் கோலி கடைசியாக 2019 ஆண்டு நடந்த, வங்கதேச அணிக்கு எதிரான பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து இருந்தார். அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்பு தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி-20 போட்டியில் சதமடித்துள்ளார். அவர் 61 பந்துகளில் 122 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இது அவருக்கு சர்வதேச போட்டிகளில் 71 வது சதமாகும். இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் அதிக சதம் விளாசியவர்களில் 2 வது இடத்தை பிடித்திருந்த ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். இந்த வரிசையில் 100 சதங்களுடன் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் முதல் இடத்தில் உள்ளார்.