திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பந்து வீசுவதற்கு முன்பே நோ பந்தை கணித்த பொல்லார்ட்! வைரலாகும் வீடியோ.
வெஸ்ட் இண்டீஸ் – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபரா வெற்றிபெற்றது.
இந்நிலையில் இரண்டு அணிகளும் மோதும் மூன்றாவது போட்டி லக்னோவில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. 25 வது ஓவரை வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் பொல்லார்ட் வீசினார். பந்தை எதிர்கொள்ள ஆப்கானிஸ்தான் அணி வீரர் அஸ்கர் ஆப்கான் தயாராக இருந்தார்.
பொல்லார்ட் பந்தை வீச ஓடிவந்த நிலையில் பொல்லார்ட்டின் கால் கிரீஸை விட்டு வெளியே சென்றுவிட்டது. இதனை அறிந்துகொண்ட பொல்லார்ட் பந்தை வீசாமல் பந்தை வீசுவதுபோல் பாவனை செய்துவிட்டு திரும்பிவிட்டார்.
இதன்மூலம் நோ பால் ரன் தடுக்கப்பட்டதோடு பிரீ கிட்டும் தடுக்கப்பட்டது. பொல்லார்ட்டின் இந்த சமயோசித நிகழ்வு, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருவதோடு பல்வேறு விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.