மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ருத்ர தாண்டவம் ஆடிய ஷர்துல் தாக்கூர்..!! 81 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அபார வெற்றி..!!
பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
கடந்த 2008 ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 9 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 9 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற அணி பெங்களூரு அணி கேப்டன் பாப்-டு-பிளசி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து கொல்கத்தா அணிக்கு தொடக்க வீரர்களாக வெங்கடேஷ் அய்யர்-ரஹ்மத்துல்லா குர்பாஸ் ஜோடி களமிறங்கியது. வெங்கடேஷ் அய்யர், மந்தீப் சிங், நிதிஷ் ராணா அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
மறுமுனையில் அதிரடி காட்டிய ரஹ்மத்துல்லா குர்பாஸ் அரைசதம் அடித்தார். தொடர்ந்து ஆடிய அவர் 57 ரன்களில் கரண் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ரசல் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழக்க, ரிங்கு சிங்-ஷர்துல் தாக்கூர் ஜோடி அதிரடி காட்டியது. தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஷர்துல் தாக்கூர் 20 பந்துகளில் அரைசதம் விளாசினார். ரிங்கு சிங் 46 ரன்களில் வெளியேறினார்.
20 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷர்துல் தாக்கூர் 68 ரன்களில் ஆட்டமிழந்தார். பெங்களூரு அனி தரப்பில் அதிகபட்சமாக வில்லி மற்றும் கரண் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 205 ரன்கள் இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு விராட் கோலி-கேப்டன் டூ பிளசி தொடக்கம் அளித்தது. தொடக்கம் முதலே அதிரடி காட்டிய இந்த ஜோடி அணியின் ரன் ரேட்டை வேகமாக உயர்த்தினர். விராட் கோலி 21 ரன்களில் வெளியேற, அவரைத் தொடர்ந்து டூ பிளசி 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதன் பின்னர் களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் 5, ஹர்சல் பட்டேல் (0) மிட்செல் பேரேஸ்வெல் 19, அனுஜ் ராவத் 1, தினேஷ் கார்த்திக் 9, கரண் சர்மா 1, ஆகாஷ் தீப் 17 ரன்களுக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த பெங்களூரு அணி 17.4 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி 4 விக்கெட்டுகளும், சுயாஷ் சர்மா 3 விக்கெட்டுகளும், சுனில் நரைன் 2 விக்கெட்டுகளும், ஷர்துல் தாக்கூர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.