திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவு.! அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் வெளியேறும் முக்கிய வீரர்.!
இலங்கை அணி வீரரான லசித் மலிங்கா அனைத்து விதமான டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
உலக கிரிக்கெட் அரங்கில் தன்னுடைய யார்க்கர் மூலம், எதிரணியை கதிகலங்க வைத்தவர் இலங்கை வீரர் லசித் மலிங்கா. ஆனால், காலம் செல்ல, செல்ல இவருடைய பந்தை அசால்ட்டாக எதிர் கொண்ட பேட்ஸ்மேன்கள் அவரது பந்தை எளிதாக அடிக்க தொடங்கினர்.
இதன்காரணமாக டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றிருந்த மலிங்கா, டி20 போட்டிகளில் விளையாடி வந்தார். எனினும், உள்ளூரில் தென்னாப்ரிக்காவுக்கு எதிரான தொடரில் அவர் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில், டி20 உள்பட அனைத்துவிதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக மலிங்கா அறிவித்துள்ளார்.
இது குறித்து மலிங்கா வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிரிக்கெட்டின் அனைத்து விதமான போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன். அதே சமயம் விளையாட்டின் உணர்வை மேம்படுத்தும் இளைய தலைமுறையினருக்கு நான் தொடர்ந்து ஆதரவளிப்பேன், விளையாட்டை விரும்பும் அனைவருடனும் நான் எப்போதும் இருப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.