தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
கடைசி 2 ஓவரில் திக்..திக் ஆட்டம்.! அசால்ட் செய்த குர்னால் பாண்டியா.! முதல் வெற்றியை பதிவு செய்த லக்னோ அணி.!
2022 ஐ.பி.எல். தொடரின் நேற்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் குவித்தது.
டெல்லி அணியில் சிறப்பாக விளையாடிய பிரித்வி ஷா 34 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து அந்த அணியில் பண்ட் 39 ரன்களும், சர்ப்ராஸ் கான் 36 ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். லக்னோ அணியில் ரவி பிஷ்ணோய் 2 விக்கெட்டுகளையும், கே.கவுதம் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக குவின்டன் டி காக் - கேப்டன் கே எல் ராகுல் களமிறங்கினர். கே எல் ராகுல் 24 ரன்களில் அவுட் ஆனார். இதனையடுத்து சிறப்பாக ஆடிய டி காக் 80 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். கடைசி 2 ஓவரில் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது.
அப்போது ஆடிய குர்னால் பாண்டியா 19 ஓவரை வீசிய முஸ்தபிஸுர் ரஹ்மான் பந்துகளை சிறப்பாக ஆடி அணியின் வெற்றியை ஏறக்குறைய உறுதி செய்து இறுதி ஓவரில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. இறுதியில் லக்னோ அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.