ராஜஸ்தானின் ராஜநடைக்கு முடிவு கட்டிய லக்னோ..!! பரபரப்பான ஆட்டத்தில் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!!



Lucknow won the 26th match between Rajasthan Royals and Lucknow Supergiants by 14 runs.

ராஜஸ்தான் ராயல்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான 26 வது லீக் போட்டியில் லக்னோ அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 25 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. ஜெய்ப்பூரில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 26 வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை ட்ஹேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய லக்னோ அணிக்கு கே.எல்.ராகுல்-கைல் மேயர்ஸ் ஜோடி தொடக்கவீரர்களாக களமிறங்கினர். தொடக்கம் முதலே தடுமாறிய இந்த ஜோடி நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தது.

அணியின் ஸ்கோர் 82 ரன்களை எட்டியபோது கே.எல்.ராகுல் 39 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த ஆயுஷ் பதோனி 1, தீபக் ஹூடா 2 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அரைசதம் அடித்த கைல் மேயர்ஸ் 51 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் ஜோடி சேர்ந்த மார்க் ஸ்டோனிஸ்-நிக்கோலஸ் பூரன் ஜோடியினர் அதிரடிகாட்டினர். இந்த ஜோடியில், மார்க் ஸ்டோனிஸ் 21 ரன்களில் ஆட்டமிழக்க 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 154 ரன்கள் சேர்த்தது.

இதனை தொடர்ந்து 155 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு, ஜெய்ஸ்வால்-ஜோஸ் பட்லர் ஜோடியினர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ரன்களை அதிரடியாக திரட்டிய தொடக்க ஜோடி, 87 ரன்கள் சேர்த்து பிரிந்தது. 44 ரன்கள் திரட்டிய ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்த பின்பு களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 2 ரன்களுடன் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.

முக்கிய கட்டத்தில் ஜோஸ் பட்லர் 41 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அந்த அணியின் வெற்றிக்கு 6 பந்துகளில் 19 ரன்கள் தேவைப்பட்டது. ஆவேஷ் கான் வீசிய கடைசி ஓவரில் வெறும் 4 ரன்கள் மட்டுமே திரட்டிய ராஜஸ்தான் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.