மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்தியாவிற்கு மாபெரும் பெருமை சேர்த்த அன்புமகன்!! பெருமிதத்தில் திக்குமுக்காடிபோன நடிகர் மாதவன்!! புகைப்படங்கள் இதோ..
தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அலைப்பாயுதே திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சாக்லேட் ஹீரோவாக மாறி பெண்களின் கனவுகண்ணனாக வலம் வந்தவர் நடிகர் மாதவன். அதனை தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்த அவருக்கெனவே ஏகப்பட்ட பெண் ரசிகர்கள் உள்ளனர்.
மாதவனின் மனைவி சரிதா இவர்களுக்கு 14 வயதில் வேதாந்த் என்ற மகன் உள்ளார், அவர் ஆசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக பங்கேற்று வருகிறார்.
நீச்சலில் அசாத்திய திறமை கொண்ட வேதாந்த் கடந்த ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். இந்நிலையில் தனது மகனின் சாதனை குறித்தும், அவன் இந்தியாவிற்கு பெருமை சேர்த்தது குறித்தும் மாதவன் அவ்வப்போது பெருமையாக தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருவார்.
இந்நிலையில் தற்போதும் ஆசிய விளையாட்டு போட்டியில் 4x100 மீட்டர் இரண்டாம் குழு ஃப்ரீ ஸ்டைல் நீச்சல் பிரிவில் இந்தியா சார்பில் வேதாந்த், சாஹில் லஸ்கர், உத்கார்ஷ் பாட்டீஸ், ஷோவான் கங்குலி ஆகியோர் பங்கேற்றனர் அதனைத் தொடர்ந்து அவர்கள் இரண்டாவது இடம்பிடித்து இந்தியாவிற்கு வெள்ளி பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளனர். மேலும் தாய்லாந்து முதலிடமும், ஜப்பான் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
இந்நிலையில் இந்தியா சார்பில் பங்கேற்ற சாதனை படைத்த தனது மகன் அவனது குழுவினருக்கும் மாதவன் வாழ்த்து கூறி தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார் அதனைத் தொடர்ந்து அவருக்கு பலரும் அந்த குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்