வீணாப்போன மயங் அகர்வால், மில்லரின் அரைசதம்! ஆட்டநாயகன் யார் தெரியுமா?



man of the match in yesterday


ஐபில் போட்டியின் 12 வது சீஸனின் ஆறாவது போட்டியான இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தநிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியின் துவக்க வீரரான க்றிஸ் லைன் சொர்ப்பரண்களில் வெளியேறினார். நரேன் 9 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்ததாக கைகோர்த்த உத்தப்பா, ராணா ஜோடி சிறப்பாக ஆடி அணியின் எணிக்கையை உயர்த்தினர். ராணா 34 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து அவுட் ஆகி வெளியேறினார். ராபின் உத்தப்பா நிதானமாக ஆடி 65 ரன்களை எடுத்தார். 

kkr
அதனையடுத்து களமிறங்கிய ரஸ்ஸல் 4 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதிர்ஷ்டத்தால் நோபால் கொடுக்கப்பட்டு மீண்டும் வாய்ப்பு கிடைத்து  17 பந்துகளுக்கு 48 ரன்கள் எடுத்தார் அதில் மூன்று பவுண்டரிகளும் ஐந்து சிக்ஸர்களும் அடங்கும். இந்தநிலையில் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி  218 ரன்களை எடுத்து.

இதனையடுத்து 219 ரன்கள் எடுத்தால் வெற்றி இன்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் ஆணி ஆரம்பத்திலே மோசமாக ஆடியது. துவக்க மட்டையாளர்கள் இருவர்களும் சொதப்பிய நிலையில் மாயங் அகர்வால் அதிரடியாக ஆடி 34 பந்துகளில் 58 ஓட்டங்களை எடுத்து அவுட் ஆகினார். அடுத்ததாக மில்லர் 40 பந்துகளில் 59 ஓட்டங்களை எடுத்து அவுட் ஆகாமல் இறுதிவரை களத்தில் நின்றார்.

kkr

ஆனாலும் கொல்கத்தாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அவர்களின் இலக்கை எட்டமுடியவில்லை. பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிந்தநிலையில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது.  28 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ரஸ்ஸல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.