மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாழ்வா சாவா ஆட்டம்.! கெத்து காட்டிய நியூசிலாந்து.! அனல் பறக்க ஆடிய பாகிஸ்தான்.! படுக்கவைத்த மழை.!
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 35ஆவது லீக் தற்போது பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பவுலிங் தேர்வு செய்துள்ளார். கட்டாய வெற்றி பெற வேண்டிய நிலையில் பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது பாகிஸ்தான் அணி. இவ்விரு அணிகளுக்குமே இந்தப் போட்டி வாழ்வா சாவா என்ற நிலையில் மிகவும் எதிரபார்ப்புடன் போட்டி நடைபெற்று வருகின்றன.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் துவக்க வீரர் கான்வே 35 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த வில்லியம்சனும் ரச்சினும் சிறப்பாக விளையாடினார்கள். அசத்தலாக விளையாடிய ரச்சின் ரவீந்திரா சதமடித்து 108 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் எடுத்துள்ளது.
இதனையடுத்து 402 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தொடங்கியது. ஆரம்பத்திலேயே அதிரடியாக பாகிஸ்தான் வீரர்கள் விளையாடினர். 21.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு பாகிஸ்தான் அணி 160 ரன்கள் எடுத்து இருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.