மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழ் பாரம்பரிய பெண்ணை திருமணம் செய்யும் ஆஸ்திரேலியா பிரபல கிரிக்கெட் வீரர்! வெளியானது நிச்சயதார்த்த புகைப்படம்
ஆஸ்திரேலிய அணியின் முன்னணி அதிரடி ஆட்டக்காரரான மேக்ஸ்வெலும் அவரது தோழியான தமிழகத்தை பூர்விகமாக கொண்ட வினிராமன் என்ற பெண்ணுக்கு திருமணம் நிச்சயிச்சயம் செய்யப்பட்ட நிலையில் அவர்களது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலிய அணியின் முன்னணி ஆல் ரவுண்டராக மட்டுமின்றி உலக அளவில் சிறந்த ஆட்டக்காரராக விளங்குபவர் க்ளென் மேக்ஸ்வெல். இவர் ஆஸ்திரேலிய அணியில் கடந்த 10 ஆண்டுகளாக விளையாடி அணிக்கு பெருமை சேர்த்து வருகிறார்.
இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணி உலக கோப்பை வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார். அதன் பிறகு மனரீதியாக சில பிரச்சினைகள் இருப்பதாக கூறி தற்காலிக விடுப்பு எடுத்தார். அந்த நிலையில் அவருக்கு உறுதுணையாக இருந்து தைரியம் கூறியவர் அவரது தோழி வினிராமன்.
அதற்கு பிறகு மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் சேர்ந்த மேக்ஸ்வெல் தனது திறமையால் சிறந்த ஆட்டக்காரராக விளங்கி வருகிறார். இதற்கிடையே தனது தோழியான இந்திய வம்சாவளியை சேர்ந்த வினிராமனின் மீது காதல் வயப்பட்டார்.
தற்போது இவர்களின் நிச்சயதார்த்தம் இந்திய முறைப்படி நடைப்பெற்றுள்ளது. தற்போது அழகிய ஜோடியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.