மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிக்ஸர் அடித்த அடுத்த பந்திலே ஸ்டம்பை தெறிக்க விட்ட பஞ்சாப் வீரர்..! திகைத்துப்போன விராட் கோலி.!
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரின் 26-வது லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது. அந்த ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதியது.
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பெங்களூரு அணி பேட்டிங் செய்தபோது இரண்டாவது ஓவரின் முதல் பந்திலே பெங்களூரு அணியின் துவக்க வீரர் டேவிட் படிக்கல் சிக்ஸர் பறக்கவிட்டார். அதைத் தொடர்ந்து அடுத்த பந்தையும் தூக்கி அடிக்க முயன்ற அவரை, தன்னுடைய துல்லியமான பந்து வீச்சின் மூலம் போல்டாக்கி வெளியேற்றினார் மேர்டித். இதனைப்பார்த்த விராட்கோலி திகைத்துநின்று பார்த்தார்.