மேரி கோம் நீங்கள் தான் வெற்றியாளர்... இந்த உலகில் யாரும் உங்ககிட்ட நெருங்க முடியாது.! இந்திய வீராங்கனைக்கு மத்திய அமைச்சர் ஆறுதல்.!



minister-kiren-rijiju-support-to-boxer

32-வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இந்தியாவின் நட்சத்திர குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், நேற்று நேற்று நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் கொலம்பியா வீராங்கனை இங்கிரிட் வெலன்சியாவுடன் போட்டியிட்டார். அதில் கொலம்பிய வீராங்கனையிடம் 2 - 3 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் மேரி கோம் தோல்வியை தழுவினார். 

அதாவது மேரி கோம் பெற்ற 2 சுற்றுகளின் புள்ளி வித்தியாசங்கள் 3 -2, 3 - 2 ஆகும். ஆனால் முதல் சுற்றில் கொலம்பியா வீராங்கனை வென்ற புள்ளி வித்தியாசம் 1 - 4 ஆகும். எனவே புள்ளி வித்தியாச அடிப்படையில் இந்த போட்டியில் மேரி கோம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் புள்ளிகளை கணக்கிடுவதில் நடுவர்களின் கணக்கு மாறுபட்டிருந்தாலும் நம்மை பொறுத்தவரையில் மேரி கோம் தான் வெற்றியாளர் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு  தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அவரது ட்விட்டர் பக்கத்தில், அன்புள்ள மேரி கோம், நீங்கள் டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒரே ஒரு புள்ளி வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருக்கலாம். ஆனால் எனக்கு நீங்கள் எப்போதுமே சாம்பியன் பாக்சர் தான். இந்த உலகில் எந்தவொரு குத்துச்சண்டை வீராங்கனையும் நெருங்க முடியாத சாதனைகளை நீங்கள் படைத்துள்ளீர்கள்.  இந்தியாவின் பெருமை நீங்கள். குத்துச்சண்டையும், ஒலிம்பிக்கும் உங்களை மிஸ் செய்யும் என  தெரிவித்துள்ளார்.