மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மளமளவென சரிந்த பெங்களூரு வீரர்கள்! ப்ளே ஆஃபில் நுழைய ஹைதராபாத் அணி தீவிரம்
மளமளவென சரியும் பெங்களூரு வீரர்கள்! ப்ளே ஆஃபில் நுழைய ஹைதராபாத் அணி தீவிரம்
நடந்து வரும் 12 ஆவது ஐபிஎல் தொடரின் 54 ஆவது ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் இது கடைசி லீக் போட்டியாகும்.
ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பினை பெங்களூரு அணி ஏற்கனவே இழந்துவிட்டது. ஆனால் ஹைதராபாத் அணி இந்த போட்டியில் வெல்லும்பட்சத்தில் அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு அதிகம் உள்ளது.
ப்ளே ஆஃப் சுற்றுக்கு சென்னை, டெல்லி, மும்பை அணிகள் ஏற்கனவே தகுதிபெற்றுள்ள நிலையில் நான்காவது அணியாக யார் வருவர் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்த இடத்திற்கு தற்பொழுது ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு மட்டுமே வாய்ப்புள்ளது.
இரு அணிகளும் 12 புள்ளிகள் பெற்றுள்ளன. ஆனால் ஹைதராபாத் அணி +0.653 புள்ளிகள் ரன் ரேட்டுடன் நான்காம் இடத்திலும், கொல்கத்தா அணி +0.173 ரன் ரேட்டுடன் அடுத்த இடத்திலும் உள்ளன. எனவே இன்று பெங்களூருவுடனான ஆட்டத்தில் ஹைதராபாத் அணி நல்ல ரன் ரேட் வித்தியாசத்தில் வென்றால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற சிறந்த வாயப்புள்ளது.
அதறகேற்றாற் போல் இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 175 ரன்கள் எடுத்துள்ளது. அடுத்து களமிறங்கிய பெங்களூரு அணியின் முக்கிய வீரர்களான பார்த்திவ் படேல், விராட் கோலி, டிவில்லியர்ஸ் ஆகிய மூவரும் முதல் 3 ஓவரிலியே ஆட்டமிழந்தனர். எனவே பெங்களூரு அணியை குறைந்த ரன்னில் சுருட்டி வென்றுவிடலாம் என்ற முனைப்பில் ஹைதராபாத் அணி போராடி வருகிறது.
அதே வேளையில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா அணி மும்பை அணியை மிகவும் அதிகமான ரன் வித்தியாசத்தில் வென்றால் ஹைதராபாத் அணியை ரன்ரேட் அடிப்படையில் பின்னுக்கு தள்ளி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும்.