மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மிக கோவமாய் சண்டை போட்ட தோணி! கடைசி ஓவரில் நடந்த பரபரப்பு!
ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் மோதின. ராஜஸ்தானின் சொந்த மண்ணில் நடைபெற்ற ஆட்டத்தில் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து த்ரில் வெற்றிபெற்றது சென்னை அணி.
இந்நிலையில் கடைசி ஓவரில் 18 ரன் தேவை என்ற நிலையில் பென் ஸ்டோக்ஸ் வீசிய முதல் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார் ஜடேஜா. அடுத்த பந்தை நோ பந்தாக வீசினர் ஸ்டோக்ஸ். பிரீ ஹிட் பாலில் ஆடுமுனையில் நின்ற தோணி இரண்டு ஓட்டம் மட்டுமே பெற்று பென் ஸ்டோக்ஸ் வீசிய அடுத்த பந்தில் போல்டாகி வெளியேறினார்.
4 பந்துகளில் 8 ஓட்டம் வேண்டிய நிலையில் நியூசிலாந்து வீரர் சாண்ட்னெர் பேட் செய்ய வந்தார். பென் ஸ்டோக்ஸ் வீசிய மூன்றாவது பந்து சாண்ட்னெர் தோல்பட்டைக்கு மேல் சென்றது. இதனால் மெயின் அம்பைர் நோ பந்தாக அறிவித்தார். ஆனால் பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்து நோ பந்து இல்லை என லெக் அம்பயர் தெரிவித்தார். அம்பையர்களின் இந்த மாறுபட்ட முடிவால் காலத்தில் நின்ற ஜடேஜா லெக் அம்பையருடன் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தார்.
இதனை கவனித்து கொண்டிருந்த சென்னை அணியின் கேப்டன் தோணி உடனே காலத்தில் இறங்கி நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மிஸ்டர் கூல் என அழைக்கப்படும் தல தோணி இன்று அம்பைர்களின் முடிவால் மிகவும் கோபமாகி, வாக்குவாதத்தில் ஈடுபட்டது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தது.
என்னதான் வாக்குவாதம் செய்தாலும் லெக் அம்பைர் தனது முடிவை மாற்றிக்கொள்வதாக இல்லை. ஒருவழியாக கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து சென்னை அணி த்ரில் வெற்றிபெற்றது.