மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சென்னை அணி தோற்கவேண்டும் என வேண்டிய தோனியின் ரசிகர்கள்! காரணம் என்ன தெரியுமா?
ஐபிஎல் முதல் பிளே ஆப் சுற்றில் மும்பை அணிக்கு எதிராக சென்னை தோற்க வேண்டும் என வேண்டியதற்கான காரணத்தை விசாகப்பட்டிண தோனி ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.
முதல் பிளே ஆப் போட்டியில் தோற்று தோனியின் தலைமையிலான சிஎஸ்கே அணி விசாகப்பட்டிணத்துக்கு வரவேண்டும், தோனியின் அதிரடி ஆட்டத்தை பார்க்க ஆவலுடன் இருப்பதாக விசாகப்பட்டிண ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
விசாகப்பட்டிணம் மைதானம் தோனிக்கு சாதகமான மைதானம். இந்த மைதானத்தில் தான் 2005 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக 148 ரன்கள் விளாசினார். எனவே இரண்டாவது பிளே ஆப் சுற்றில் சென்னை விளையாட வேண்டும் என விரும்பினோம். எப்படியும் விசாகப்பட்டினத்தில் ஆட்டம் நடந்தால் சென்னை அணி வெற்றி பெற்றுவிடும்.
விசாகப்பட்டிண ரசிகர்களின் ஆசை படியே சென்னை வெற்றி பெற்றுவிட்டது. ஆனால் தோனியின் ஆட்டம் ரசிகர்களை ஏமாற்றியது. அந்த மைதானத்தில் அதிரடியாக ஆடுவார் என எதிர்பார்த்த நிலையில் தோனி 9 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார்.