நேற்றைய ஆட்டத்தில் சக வீரர்களுக்கு தோனி அந்த அறிவுரை.! இது தான் அத கூல் கேப்டன்.! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.?



ms dhoni talk about yesterday match

ஐ.பி.எல். தொடரின் 15-வது லீக் ஆட்டம் நேற்று மும்பையில் நடைபெற்றது. அந்த ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இயான் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணியும் மோதியது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மார்கன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி  19.1 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

csk

நேற்றைய போட்டி முடிந்த பிறகு தோனி பேசுகையில், நேற்றய ஆட்டத்தில் கொல்கத்தா அணியில் கூடுதல் விக்கெட்டுகள் கைவசம் இருந்திருந்தால் ஆட்டம் வேறு விதமாக இருந்திருக்கலாம். கிரிக்கெட்டில் இதுபோன்றவற்றை அதிக அளவில் பார்த்திருக்கிறோம்.  நான் அணியினரிடம் கூறுகையில், நீங்கள் ரன்கள் குவித்து விட்டீர்கள் என்பதால் எதிரணி அடிக்காது என்பதற்கு எந்த ஒரு நல்ல காரணமும் கிடையாது. 

நாம்  நல்ல ரன்களை அடித்து விட்டோம். ஆனால் நாம் பொறுப்புடன் விளையாட வேண்டும். அதிக அளவு விக்கெட்டுகளை விரைவாக எடுக்க விரும்பக்கூடாது. ஏனெனில் அதிரடியாக ஆடக்கூடியவர்கள் வந்த பிறகு 200 ரன்கள் என்பதால், அவர்கள் அடித்து ஆடுவதற்கு ஒரே வழிதான் உள்ளது என கூறினேன் என்று தோனி தெரிவித்தார்.