தல தோனி கிரிக்கெட்ல மட்டுமா கில்லி!... அவரின் வாலிபால் ஆட்டம் பார்த்திருக்கீங்களா? வைரல் வீடியோ!



MS Dhoni volleyball video


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக இருக்கிறார். காஷ்மீரில், இந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் வீரர்களுடன் இணைந்து பயிற்சி பெற அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து 2 மாதங்கள் ஓய்வு எடுத்துள்ள இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி, காஷ்மீரில் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். பாராமிலிட்டரியின் 106-வது பட்டாலியனில் இயங்கும் விக்டர் படையில் தோனி இணைந்துள்ளார். வருகிற 15-ம் தேதி வரை அவர் ரோந்து பணியில் ஈடுபடுவார்.



 

இந்நிலையில், அவர் ராணுவ வீரர்களுடன் கைப்பந்து விளையாடும் வீடியோ ஒன்று அவரது ரசிகர்களால் வெளியிடப் பட்டுள்ளது. அவர் ராணுவ வீரர்களுடன் வாலிபால் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.