மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடுத்த சுற்றுக்கு முன்னேறப் போவது யார்..?!! ஒரு இடத்தை பிடிக்க கோதாவில் குதிக்கும் மும்பை, பெங்களூரு அணிகள்..!!
ப்ளே-ஆப் சுற்றில் எஞ்சியுள்ள் ஒரு இடத்தை பிடிக்க மும்பை, பெங்களூரு அணிகள் இன்று கோதாவில் குதிக்கின்றன.
கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 68 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. கொல்கத்தா ஈடன் கார்டன்மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற 69 வது லீக் போட்டியில் மும்பை-ஐதராபத் அணிகளும் கடைசி லீக் போட்டியில் பெங்களூரு-குஜராத் அணிகளும் மோதுகின்றன.
முன்னதாக குஜராத் அணி முதல் அணியாக ப்ளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. நேற்றைய போட்டிகளில் வெற்றி பெற்ற சென்னை மற்றும் லக்னோ அணிகள் ப்ளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. ப்ளே-ஆப் சுற்றுக்கு முன்னேற கட்டாய வெற்றி என்ற நெருக்கடியுடன் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் இன்று கோதாவில் குதிக்கின்றன.
மாலை 3.30 க்கு வான்கடே ஸ்டேடியத்தில் தொடங்கும் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றாலும், இரவு 7.30 மணிக்கு தொடங்கும் பெங்களூரு-குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டியின் முடிவுக்காக காத்திருக்க வேண்டிய கட்டாயத்திற்கு மும்பை அணி தள்ளப்பட்டுள்ளது.
இந்த தொடரில் இதுவரை தலா 13 போட்டிகளில் பங்கேற்றுள்ள மும்பை மற்றும் பெங்களூரு அணிகள், தலா 7 வெற்றி, 6 தோல்விகளுடன் 14 புள்ளிகளை பெற்றுள்ளன. இருந்த போதிலும் நிகர ரன் ரேட் அடிப்படையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 4 வது இடத்தையும் மும்பை இந்தியன்ஸ் 6 இடத்தையும் பிடித்துள்ளன.
இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாலும் எஞ்சியுள்ள 1 இடத்தை பிடிக்க ரன் ரேட் நல்ல நிலையில் இருக்க வேண்டியது அவசியம். மும்பை, பெங்களூரு அணிகள் உள்ளூர் மைதானத்தில் விளையாடுவது கூடுதல் பலம். ஒருவேளை ஒரு அணி தோல்வியடையும் பட்சத்தில் மற்றொறு அணி சிக்கலின்றி ப்ளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். இரண்டு அணிகளும் வெற்றி பெற்றால் எந்த அணி ரன் ரேட் அடிப்படையில் முன்னிலை வகிக்கிறதோ அந்த அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும்.