திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#Breaking: ஐ.பி.எல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக பொல்லார்ட் அறிவிப்பு.. சோகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்.!
பேட்டிங்கில் எதிரணியின் பந்துகளை மைதானத்திற்கு வெளியே மின்னல் வேகத்தில் சிதறவிடும் நாயகன் ஐ.பி.எல் தொடரில் தனது ஓய்வை அறிவித்தார்.
இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டித்தொடரில் மறக்க முடியாத வெளிநாட்டு வீரர் பொல்லார்ட். மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரராக இருக்கும் பொல்லார்ட், இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இன்று வரை விளையாடி வந்தார்.
எதிர்வரும் 2023 ஐ.பி.எல் தொடரிலும் அவர் விளையாடுவர் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அவர் ஐ.பி.எல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். எதிர் அணியினர் பதறும் அளவுக்கு தனது அதிரடி பேட்டிங் ஆட்டத்தினால் அலறவிடுவார்.
மும்பை அணியின் பல வெற்றிக்காக பொல்லார்ட் பேருதவி செய்திருக்கிறார், சிறந்த ஆட்டக்காரராகவும் விளக்கியிருக்கிறார். 13 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த பொல்லார்ட் தனது ஓய்வை அறிவித்து இருக்கிறார். அவரின் இம்முடிவு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.