மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னா அடி? இந்த அடி அடிச்சா..!! இறுமாப்பில் இருந்த பஞ்சாப்புக்கு பாடம் புகட்டிய மும்பை..!!
பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 46 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில் இந்த போட்டித் தொடர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று இரவு நடைபெற்ற 46 வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு ஷிகர் தவான்-பிரபசிம்ரான் சிங் ஜோடி இன்னிங்ஸை துவங்கியது. பிரபசிம்ரான் 9 ரன்களில் வெளியேற, மேத்யூ ஷார்ட், ஷிகர் தவானுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தவான் 30 ரன்களிலும், மேத்யூ ஷார்ட் 27 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் கைகோர்த்த லியாம் லிவிங்ஸ்டன்-ஜிதேஷ் ஷர்மா ஜோடி அதிரடியாக விளையாடியதுடன் பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டனர். லிவிங்ஸ்டன் 32பந்துகளில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய லிவிங்ஸ்டன், ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய 19 வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் விளாசினார். 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 3விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. லிவிங்ஸ்டன் 82 ரன்களும் , ஜிதேஷ் ஷர்மா 49 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதனை தொடர்ந்து 215 ரன்கள் இலக்கை துரத்திய மும்பை அணிக்கு ரோஹித் சர்மா-இஷான் கிஷன் இன்னிங்ஸை தொடங்கினர். ரோஹித் சர்மா டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். பின்னர் வந்த ஆல்ரவுண்டர் கேமரான் கிரீன் 23 ரன்கள் நிலைக்கவில்லை. இதன் பின்னர் இஷான் கிஷனுடன் இணைந்த சூர்யகுமார் யாதவ் அதிரடியாக தொடங்கினார். இந்த ஜோடியில் சூர்யகுமார் யாதவ் 31 பந்துகளில் 66 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் இஷான் கிஷன் 41 பந்துகளில் 7 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களை விளாசி 71 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதி ஓவர்களை சந்தித்த திலக் வர்மா, 10 பந்துகளில் 26 ரன்கள் குவித்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.