ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
அண்ணா.. உண்மையான மாஸ்டர் தி பிளாஸ்டர் நீங்கள் தான்.! நடராஜன் யாரை பாராட்டியுள்ளார் பார்த்தீர்களா.?
கொரோனா அச்சுறுத்தலுக்கு பிறகு இந்தியாவில் நடைபெற்ற முதல் உள்ளூர் தொடரான சையத் முஷ்டக் அலி ட்ராபியில் தமிழ்நாடு அணி சாம்பியன் ஆகி தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. இந்த சையத் முஷ்டக் அலி ட்ராபி சீசனில் ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவாமல் தமிழ்நாடு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி கோப்பையை கைப்பற்றியது.
தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி கோப்பையை கைப்பற்றியதையடுத்து கிரிக்கெட் வீரர் நடராஜன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்திய அணியின் தமிழக வீரர் நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், சையத் முஷ்டாக் அலி கோப்பை வெற்றியானது நம் தமிழ்நாடு கிரிக்கெட் அணி வீரர்களின் திறனையும், அணியின் ஆழத்தையும் வெளிபடுத்தியுள்ளது.
Our title triumph in the #SMAT, is a glowing endorsement of the talent pool and depth in Tamil Nadu cricket! Absolutely proud of this incredible achievement. Amazing team effort and hats off to the legend @DineshKarthik Anna! True Master the Blaster pic.twitter.com/fE8WZ5hRhI
— Natarajan (@Natarajan_91) February 3, 2021
இந்த அபாரமான சாதனையை கண்டு பெருமை கொள்கிறேன். ஒட்டுமொத்த அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது. ஹேட்ஸ் ஆப் தினேஷ் கார்த்திக் அண்ணா. நீங்கள் தான் அசலான மாஸ்டர் தி பிளாஸ்டர் என பாராட்டியுள்ளார்.