மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கெத்தாக களமிறங்கும் புதிய ஐபிஎல் அணி.!! யாரு கேப்டன்னு பார்த்தீங்களா.!
ஐபிஎல் 2020 இல் புதிதாக இணைந்துள்ள லக்னோ அணியின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. RPSG குழுமத்தின் தலைவர் சஞ்சீவ் கோவெங்கா ‘லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்’ என்று அணியின் பெயரை வெளியிட்டுள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 15ஆவது தொடர் இந்தாண்டு மார்ச் மாதம் இறுதியிலிருந்து மே மாத இறுதி வரை நடைபெறும் என பி.சி.சி.ஐ. அறிவித்தது. இந்த தொடரில் புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் அறிமுகமாகின்றன.
ஏலத்துக்கு முன்பாக இரு அணிகளும் தேர்வு செய்துள்ள வீரர்களின் பட்டியலும் சமீபத்தில் வெளியிடப்பட்டது. லக்னோ அணி கே.எல் ராகுலை ரூ. 17 கோடிக்கு தேர்வு செய்துள்ளது. இவர் அந்த அணியின் கேப்டனாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்கஸ் ஸ்டாய்னிஸ் ரூ. 9.2 கோடிக்கும், ரவி பிஷ்னாய் ரூ. 4 கோடிக்கும் அந்த அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.