T20 வரலாற்றில் புதிய சாதனை! தென் ஆப்பிரிக்கா ஆல்ரவுண்டரின் அசத்தல் பந்துவீச்சு



New record in t20

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் டி20 தொடரை போன்றே இங்கிலாந்தில் வைடாலிட்டி பிளாஸ்ட் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த காலின் அக்கர்மேன் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். 

நேற்று லீசெஸ்டர் பாஃசஸ் அணிக்கும் பிரிமிங்காம் பியர்ஸ் அணிக்கும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் லீசெஸ்டர் பாஃசஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

T20 record

லீசெஸ்டர் பாஃசஸ் அணியின் கேப்டன் காலின் அக்கர்மேன். தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இவர் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர். நேற்று இவர் 18 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஒரு டி20 போட்டியில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். 

இதற்கு முன்னதாக 2011ஆம் ஆண்டு 5 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றிய அருள் சுப்பையா என்பவர்தான் T20 சிறந்த பந்து வீச்சில் முதலிடத்தில் இருந்து வந்தார்.