#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நங்கூரமாக நின்று ஆடும் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள்! வெற்றிக்காக போராடும் இந்திய அணி
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடைபெற்றுவரும் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடி வருகின்றனர். விக்கெட் கைப்பற்ற இந்திய அணி போராடி வருகிறது.
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்களை விளாசியது. இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா அதிகபட்சமாக 140 ரன்கள் விளாசினார். கேஎல் ராகுல் மற்றும் கேப்டன் விராட் கோலி அரைசதம் அடித்தனர்.
336 என்ற இமாலய இலக்கை எட்டி பிடிக்கும் நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமாக ஆடினர். ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரை வீசிய போது புவனேஷ்குமார் காலில் காயம் ஏற்படவே பாதியில் வெளியேறிவிட்டார். அவருக்கு பதிலாக பந்துவீச வந்த விஜய் சங்கர் முதல் பந்திலேயே இந்தியாவிற்கு முதல் விக்கெட்டை பெற்றுத் தந்தார்.
அதன்பிறகு ஜோடி சேர்ந்த பக்கர் ஜமான் மற்றும் பாபர் அசாம் சிறப்பான டேட்டிங்கை செய்து வந்தனர். சிறப்பாக ஆடி வந்த துவக்க ஆட்டக்காரர் பக்கர் ஜமான் அரைசதம் அடித்தார். இருவரும் இரண்டாவது விக்கெட்டிற்கு 114 ரன்கள் சேர்த்தனர். 2 ஆவது விக்கெட்டை கைப்பற்ற இந்திய அணி நீண்டநேரம் போராடி யது.
அந்த நீண்ட நேர போராட்டத்திற்கு 24 ஆவது ஓவரில் குல்தீப் யாதவ் இந்திய அணிக்கு இரண்டாவது விக்கெட்டை கைப்பற்றி கொடுத்தார். 48 ரன்கள் எடுத்திருந்த பாபர் அசாம் குல்தீப் யாதவ் பந்தில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார். இதன் பின்னர் மீண்டும் ஒரு ஜோடி சேர்ந்தால் இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியாகிவிடும். எனவே அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றினால் மட்டுமே இந்த போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும்.