சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
உடல் எடை அதிகமாக இருக்கிறார், அதான் அவரோட பிரச்சனை.! இந்திய கேப்டனை விமர்சித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்.!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடியது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. மூன்றாவது மற்றும் நான்காவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. கடைசி போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இதனால் இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.
முதல் 2 போட்டியிலும் தோற்றதால் இந்திய அணி தொடரை இழந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் 3-வது மற்றும் 4-வது போட்டியில் தொடர்ந்து இழப்பில் இருந்து தப்பியது. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடருக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் காயம் காரணமாக அவர் விலகவே, விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த T20 தொடரில் தொடரை இழக்காமல் ரிஷப்பண்ட் விமர்சனத்தில் இருந்து தப்பினார்.
இந்த நிலையில், ரிஷப் பண்ட்டின் உடல்தகுதி குறித்து பாகிஸ்தானின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், ரிஷப் பண்ட் தற்போது மோசமான பார்மில் உள்ளார். அதோடு வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துவீசும் போது அவர் குனியாமல் நின்றுகொண்டே கீப்பிங் செய்கிறார். அவர் அதிக எடையுடன் இருப்பதால் தான் விரைவாக செயல்பட முடியவில்லை.
அவரது உடல் நலத்தில் இன்னும் கவனம் செலுத்தவேண்டும். அவர் பிட்னஸில் கவனம் செலுத்தினால் மட்டுமே அவரால் விரைவாக செயல்பட முடியும். மேலும் தனது பேட்டிங் ஸ்டைலையும் அவர் மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம். இல்லையெனில் அவருக்கு பதிலாக கே.எஸ். பரத் அல்லது சஹா ஆகியோருக்கு வாய்ப்பு கொடுத்து பண்டிற்கு தற்காலிக ஓய்வு கொடுக்கலாம் என்று கனேரியா விமர்சித்துள்ளார்.