மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வெற்றியை நோக்கி பயணித்த ஆப்கானிஸ்தான்.! மொத்தத்தையும் தலைகீழாக மாற்றிய பாகிஸ்தான் வீரர்.!
டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது அபுதாபியில் நடைபெற்று வரும் 24-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் நேற்று மோதியது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஆப்கானிஸ்தான் அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய முகமது ஷாஜாத் 8 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகி வெளியேறினார். ஹஸ்ரத்துல்லாஹ் ஜசாய் டக் அவுட் ஆனார். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தனர்.
இதனையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய ரிஸ்வான் 8 ரன்களிலும், பகர் சமான் 30 ரன்களிலும்அவுட்டாகி வெளியேறினர். பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பொறுமையாக விளையாடி 51 ரன்கள் எடுத்தநிலையில் வெளியேறினார்.
இறுதியில் ஆசிப் அலி அதிரடியாக விளையாடி ஒரு ஓவரில் 4 சிக்சர்கள் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இறுதியில், பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. இதன்மூலம் பாகிஸ்தான் தொடர்ந்து மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன்முலம், குரூப்-2வில் பாகிஸ்தான் முதலிடத்தில் உள்ளது.