பழைய புகைப்படத்தை பகிர்ந்த விராட்! கலாய்த்த பீட்டர்சன்! விராட்கோலி சொன்ன ஒத்த வார்த்தை!



pietersen comment about virat shared photo

உலகத்தையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனோவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பல கட்டங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் போட்டிகள்,  கிரிக்கெட் போட்டிகள் உள்ளிட்ட அனைத்து போட்டிகளும் தடை செய்யப்பட்டுள்ளது

இந்நிலையில் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். இந்த நிலையில் விளையாட்டு வீரர்கள் சமூக வலைத்தளங்களில் உரையாடி வருவதும், அவர்கள் வீடியோக்களை பகிர்ந்து வருவதும் ரசிகர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. 

View this post on Instagram

Throwback 👀

A post shared by Virat Kohli (@virat.kohli) on

இந்நிலையில் இன்று தனது சமூக வலைதள பக்கத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தனது பழைய போட்டோவை பதிவிட்டு, நினைவுகள் என குறிப்பிட்டிருந்தார். இதற்கு கிண்டல் அடிக்கும் வகையில் பதிலளித்திருந்த இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பீட்டர்ஸன், "அந்த தாடியை கொஞ்சம் ஷேவ் செய்யவும்" எனத் தெரிவித்திருந்தார். 

அதற்கு நகைச்சுவையாகப் பதிலளித்திருந்த விராட் கோலி, “உங்கள் டிக்டாக் வீடியோவை விட இது மேல்” எனத் தெரிவித்துள்ளார். இந்தக் கருத்திற்கு இடையே கிரிக்கெட் ரசிகர்கள் பல கருத்துகளைக் கூறிவருகின்றனர்.