மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. இந்திய ஹாக்கி வீரர் மீது வழக்கு பதிவு!
17 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இந்திய ஹாக்கி வீரர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த இந்திய ஹாக்கி வீரர் வருண்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இவரால் பாதிக்கப்பட்ட இளம் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் பெங்களூரு ஞானபாரதி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இமாச்சலப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த இந்திய ஹாக்கி வீரர் வருண்குமார் சமூக வலைதளம் மூலம் 17 வயது பெண்ணுடன் பழகி, அவரை காதலிப்பதாக கூறி பலமுறை உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதில், கடந்த ஐந்து ஆண்டுகளாக பழகி வந்த நிலையில், திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக இளம் பெண் புகார் அளித்த நிலையில், இந்தியா ஹாக்கி வீரர் வருண்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.