மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இப்படி ஒரு வழுக்குமரம் ஏறும் போட்டியை யாரும் பாத்திருக்க முடியாது! வைரல் வீடியோ!
ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் பொங்கல் விழாவன்று ஊர் பொதுமக்கள் விதவிதமான விளையாட்டு போட்டிகளை நடத்துவது வழக்கம். பொங்கல் விழாவில், பெண்கள், சிறுமியருக்கு விளையாட்டுப் போட்டிகள் இந்த ஆண்டும் பல ஊர்களில் நடத்தப்பட்டன. அந்த விழாவில் ஓட்டப்பந்தயம், சைக்கிள் ஓட்டும் பந்தயம், இசை நாற்காலி, எலுமிச்சை பழத்தை ஸ்பூனில் வைத்து ஓடுதல், சாக்கு போட்டி, கயிறு இழுத்தல், இளவட்டக்கல் தூக்குதல், பானை உடைத்தல், பலூன் உடைத்தல், கபடி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
பொங்கல் விழா என்றாலே ஒருவாரத்திற்கு திருவிழாவாக தான் இருக்கும். பொங்கல் விழாவில் சிறுவர்கள் முதல் முதியவர்களுக்கான விளையாட்டுகள் நடத்தப்படும். இந்த விழாவில் கருத்து வேறுபாட்டால் பிரிந்தவர்கள் கூட இணைவார்கள்.அந்த அளவிற்கு நகைச்சுவைகள் அடங்கியிருக்கும்.
பொங்கல் விழாவில் பெரும் சவாலாக இருப்பது, வழுக்குமரம் ஏறும் போட்டி தான். வழுக்குமரம் ஏறும் போட்டி என்பது உயரமான மரத்தை தரையில் ஊன்றி, அதில் எண்ணையை ஊற்றி. அதன் பின்னர் 12 பேர் கொண்ட அணியினர் களத்தில் இறங்கி ஒருவர் மீது ஒருவராக ஏறி, கடைசியில் இருப்பவர்கள் வழுக்குமரத்தின் உச்சியில் கட்டப்பட்டிருக்கும் மலர்களை அவிழ்த்து வரவேண்டும்.
இந்தவருடம் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் வழுக்குமரம் ஏறும் போட்டி சிறப்பாக நடைபெற்றது. அந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு 11,000 ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. பல அணியினர் கலந்துகொண்டு முயற்சித்தனர். இறுதியில் பனங்குளத்தை சேர்ந்த கிங்பிஷர் அணியினர் வெற்றி பெற்று பரிசை தட்டிச்சென்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.