திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சர்வதேச கிரிக்கெட்லிருந்து பிரபல இந்திய நட்சத்திர வீரர் ஓய்வு! சோகத்தில் ரசிகர்கள்!
இந்திய சுழற்பந்துவீச்சாளர் 33 வயதான பிரக்யான் ஓஜா, ஒரு சிறந்த பந்துவீச்சாளர் ஆவார். 2008ம் ஆண்டு இந்திய அணிக்காக தனது முதல் ஒரு நாள் போட்டியில் களமிறங்கிய ஓஜா, இதுவரை இந்திய அணிக்காக 18 ஒருநாள் போட்டியில் விளையாடி 652 ஓட்டங்கள் எடுத்து, 21 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
24 டெஸ்ட் போட்டியில் விளையாடிவுள்ள ஓஜா, 3,420 ஓட்டங்கள் எடுத்து, 113 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். டெஸ்டில் 7 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
It’s time I move on to the next phase of my life. The love and support of each and every individual will always remain with me and motivate me all the time 🙏🏼 pic.twitter.com/WoK0WfnCR7
— Pragyan Ojha (@pragyanojha) February 21, 2020
பிரக்யான் ஓஜா 6 டி-20 போட்டியில் 132 ஓட்டங்களுடன் 10 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஐபிஎல் தொடரில் பிரக்யான் ஓஜா மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், பிரக்யான் ஓஜா அவரது ட்விட்டர் பக்கத்தில் ஓய்வு குறித்த அறிக்கையை வெளியிட்டார். அதில், "இதுவரை தனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவரது பதிவிற்கு கிரிக்கெட் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.