#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
2019 உலக கோப்பைக்கான இந்திய உத்தேச அணி; தோனியின் இடம் உறுதி செய்யப்படுமா.!
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியானது அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்தியாவிற்கு பெற்று தந்த தல தோனி இந்த உலக கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடுவாரா மாட்டாரா என பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு காரணம் சமீப காலத்தில் இவர் ஒருநாள் போட்டிகளில் ரன் குவிக்க தடுமாறி வருவதே.
ஆனால் தற்போதைய நிலையில் இந்திய அணியில் தலைசிறந்த விக்கெட் கீப்பராக தோனி மட்டுமே செயல்பட்டு வருகிறார். எனவே விக்கெட் கீப்பர் என்ற முறையில் அவர் நிச்சயம் அணியில் இடம்பெறுவார் என தேர்வுக் குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தோனியை மட்டுமே நம்பி இருக்க முடியாததால் மற்றொரு விக்கெட் கீப்பர் உலக கோப்பை அணியில் நிச்சயம் இடம் பெறுவார் என்பதில் சந்தேகமில்லை. தற்போதைய நிலை மற்றும் உடல் தகுதியின் அடிப்படையில் இந்த இடத்திற்கு ரிசப் பண்ட் தேர்வு செய்ய பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இருப்பினும் தினேஷ் கார்த்திக்கும் அந்த இடத்திற்கு தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, தோனி ஆகியோர் நிச்சயம் அணியில் இடம்பெறும் பட்சத்தில் நான்காவது இடத்தில் களமிறங்கி சிறப்பாக ஆடிவரும் அம்பத்தி ராயுடுவிற்கும் வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்தாவது இடத்தில் களம் இறங்கும் பேட்ஸ்மேன்களுக்கு கடுமையாக போட்டி நிலவுகிறது. இந்த இடத்தில் கேதர் ஜாதவ் அல்லது மனிஷ் பாண்டே தேர்வு செய்யப்படலாம். இருப்பினும் மாற்று தொடக்க ஆட்டக்காரர் தேவை என்ற பட்சத்தில் கேஎல் ராகுல் ஒருவேளை தேர்வு செய்யப்பட்டால் இந்த ஐந்தாவது இடத்தில் களம் இறங்கும் வீரர்களுக்கு பிரச்சனை ஏற்படக்கூடும்.
பவுலிங்கை பொறுத்தவரை சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ் மற்றும் சாகல் சிறப்பாக செயல்பட்டு வருவதால் அவர்கள் நிச்சயம் அணியில் இடம் பெறுவர். ஆனால் மூன்றாவது சுழல் பந்து வீச்சாளரை தேர்வு செய்வதா இல்லையா என்பது கார்த்திக் பாண்டியாவின் உடல்நிலையை பொறுத்தே அமையும். அவரை பொறுத்தே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளரை தேர்வு செய்வதா அல்லது சுழல் பந்துவீச்சாளரை தேர்வு செய்வதா என்பது முடிவு செய்யப்படும்.
ஆல்-ரவுண்டராக ஹர்திக் பாண்டியா இடம் பெற முடியாத பட்சத்தில் அந்த இடத்தை ரவீந்திர ஜடேஜாவை கொண்டு நிரப்ப வாய்ப்பு உள்ளது. மேலும் வேகப்பந்துவீச்சாளர் வரிசையில் ஒரு இடது கை வேகப்பந்துவீச்சாளர் தேவை எனும்பட்சத்தில் கலீல் அஹ்மத் நிச்சயம் இடம் பெறுவார். மேலும் கேதர் ஜாதவ் சுழல் பந்துவீச்சை தொடரும் பட்சத்தில் இந்த இடத்திற்கும் போட்டிகள் அதிகமாக உள்ளன. இதனை தொடர்ந்து உலக கோப்பைக்கான இந்திய அணி பின்வருமாறு அமையும் என்று உத்தேசமாக கணிக்கப்படுகிறது.
ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, அம்பத்தி ராயுடு, கேதர் ஜாதவ், தோனி, ஹர்டிக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ராஹ், ரிசப் பண்ட்/தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா/கலீல் அஹ்மத், கேஎல் ராகுல்/மணிஷ் பாண்டே, உமேஷ் யாதவ்/முஹம்மது சமி .