#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இதோ வந்துவிட்டது! நாடே எதிர்ப்பு தெரிவித்த அந்த நாள்; என்ன செய்ய போகிறது இந்திய அணி!
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்திய அணி உலகக்கோப்பையில் பாக்கிஸ்தான் உடன் கிரிக்கெட் போட்டியில் ஆடக் கூடாது என பல எதிர்ப்புகள் வந்தாலும் இன்று இந்தியா பாக்கிஸ்தானை எதிர்கொள்ளபோகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது உலக கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் அந்த அட்டவணையில் முதலில் தேடியது இந்த இரு அணிகளுக்கான எப்போது மோதுகின்றன என்பதுதான். இந்திய அணி இதற்கு முன்னதாக ஆசிய கோப்பையில் பாகிஸ்தானை எதிர்கொண்டு வெற்றி பெற்றது. ஆனால் அதற்கு முன்னர் 2017 சாம்பியன் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியுற்று அதிர்ச்சியளித்தது.
உலகக்கோப்பை போட்டி அட்டவணை வெளியானதிலிருந்து ஜூன் 16ஆம் தேதிக்காகத்தான் அனைத்து ரசிகர்களுமே ஆவலோடு காத்திருந்தனர். ஆனால் பிப்ரவரி 14 ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதலை யாரும் மறந்து விட முடியாது. ஒரு தற்கொலைப் படை தீவிரவாதியால் 40 ராணுவ வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த தாக்குதலை தொடர்ந்து உலக கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர் கொள்ளக் கூடாது என நாடு முழுவதும் எதிர்ப்பு அலைகள் வீசத் தொடங்கின. சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடமும் கோரிக்கை வைக்கப்பட்டது. "எந்த போட்டியையும் ரத்து செய்ய முடியாது. ஆனால் உங்களுக்கு விருப்பமில்லை என்றால் நீங்கள் ஆட்டத்தை கைவிடலாம், பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்" என ஐசிசி தெரிவித்துவிட்டது.
அதன் பின்னர் வீணாக எதற்காக பாகிஸ்தான் அணிக்கு இரண்டு புள்ளிகளை விட்டுத்தர வேண்டும். களத்தில் சந்தித்து அவர்களை பழிவாங்குவோம் என முடிவெடுத்தது இந்திய கிரிக்கெட் அணி. அன்று எடுத்த முடிவின் காரணமாக தான் இன்று இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
நாடே எதிர்ப்பு தெரிவித்த அந்த ஜூன் 16 இன்று தான். இந்திய அணி உலகக் கோப்பையில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இதுவரை உலகக்கோப்பை தொடர்களில் பாகிஸ்தான் இந்திய அணியை வென்றது இல்லை. அந்த வரலாறு இன்று நீட்டிக்கப்படுமா அல்லது முறிக்கப்படுமா என இன்றைய நாள் இறுதியில் தெரிந்துவிடும். ஆவலோடு காத்திருப்போம்.