#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மளமளவென விக்கெட் எடுத்து புதிய சாதனை படைத்த பும்ரா! குவிந்துவரும் பாராட்டுகள்!
ஜமைக்கா நகரில் நடைபெற்று வரும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 3 வது இந்தியர் என்ற பெருமையை இந்திய கிரிக்கெட் அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பெற்றுள்ளார்.
கிங்ஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, களமிறங்கிய அகர்வால், விராட் கோலி, இஷாந்த் சர்மா ஆகியோர் அரை சதம் அடித்தனர். ஹனுமன் விஹாரி சதமடித்தார். இந்திய அணி 461 ரன்கள் எடுத்த நிலையில் முதல் இன்னிங்சில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர்.
இதனையடுத்து களமிறங்கிய மேற்கிந்தய தீவுகள் அணி, இரண்டாவது நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை இழந்து 87 ரன்கள் மட்டுமே எடுத்தது. அபாரமாக பந்து வீசிய பும்ரா ஹாட்ரிக் விக்கெட் எடுத்ததுடன் 6 விக்கெட்டுகளை எடுத்தார்.
சிறப்பாக பந்து வீசிய பும்ரா, அதிரடி வீரர்களான பிராவோ, ஷமாரா புரூக்ஸ், ரோஸ்டன் சேஸ் ஆகியோரது விக்கெட்டை எடுத்து ஹாட்ரிக் விக்கெட் ஆக்கினார்.
இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் பும்ரா.