மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நல்லவேளை சிக்ஸ் அடிக்கல.! கடைசி பந்தில் திக்.. திக்.! பரபரப்பான ஆட்டத்தின் திகில் வெற்றி.!
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 37-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மோதியது. நேற்றய ஆட்டத்தில் டாஸ் வென்ற வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, பஞ்சாப் அணியின் துவக்க வீரர்களாக அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர்.
கே.எல். ராகுல் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மயங்க் அகர்வாலும் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்ததாக கிறிஸ் கெயில் 14 ரன்களில் ரஷீத் கான் ஓவரில் அவுட்டானார். இதனைத்தொடர்ந்து நிகோலஸ் பூரன் 8 ரன்களில் அவுட் ஆனார். அந்த அணியில் அதிகபட்சமாக மார்க்ரம் 32 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து 126 ரன்கள் என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர் 2 ரன்களில் அவுட் ஆனா நிலையில், அடுத்து வந்த கேன் வில்லியம்சன் ஒரு ரன் எடுத்தநிலையில் அவுட் ஆனார்.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஓரளவுக்கு நிதானமாக ஆடிய விருத்திமான் சகா 31 ரன்களில் ரன் அவுட் ஆனார். பின்னர் சிறப்பாக ஆடிய ஜேசன் ஹோல்டர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 29 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தநிலையில் களத்தில் இருந்தார். கடைசி ஓவரில் சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கு 6 பந்துகளில் 17 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரின் இரண்டாவது பந்தில் ஹோல்டர் சிக்ஸர் அடித்தார். இதனையடுத்து பந்துகளில்10 ரன்கள் தேவை என்ற சூழ்நிலை ஏற்பட்டு கடைசி பந்தில் சிக்ஸர் அடித்தால் சூப்பர் ஓவருக்கு வாய்ப்பு இருந்தது.
ஆனால் கடைசி ஓவரை நாதன் எல்லிஸ் சிறப்பாக வீசியதால் பஞ்சாப் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதன் மூலம், இதுவரை 9வது போட்டியில் விளையாடிய சன் ரைசர்ஸ் 8வது தோல்வியை சந்திக்க நேர்ந்தது. இதனால், சன்ரைசர்ஸ் அணி ஐபிஎல் 2021 தொடரில் இருந்து வெளியேறுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.