ஐபிஎல் தொடரில் ஜொலித்து இந்திய அணியில் முதல்முறையாக இடம் பிடித்த வீரர்கள்!



Rahul chahar and navdeep saini deput in Indian cricket

அடுத்த மாதம் இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் பேட்டிகளில் ஆடவுள்ளது. 

இந்த தொடருக்கான இந்திய அணி இன்று பிசிசிஐ-ஆல் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலக கோப்பையில் ஆடிய தோனி மற்றும் ஹர்திக் பாண்டியா ஓய்வில் உள்ளனர். தினேஷ் கார்த்திக் மற்றும் விஜய்சங்கருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. காயத்தில் இருந்த தவான் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள கேதர் ஜாதவிற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Indian cricket team

மேலும் கடந்த ஐபிஎல் தொடரில் தங்களது திறமையை நிரூபித்த இளம் வீரர்களான  ஸ்ரேயஸ் ஐயர், மனிஷ் பாண்டே, குருணல் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாகர், தீபக் சாகர், கலில் அகமது மற்றும் நவ்தீப் சைனி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதில் சுழற்பந்துவீச்சாளர் ராகுல் சாகர் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி ஆகியோர் முதல்முறையாக இந்திய சீனியர் அணியில் இடம்பிடித்துள்ளனர். மும்பை அணிக்காக ஆடிய ராகுல் சாகர் கடந்த ஐபிஎல் தொடரில் 13 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பெங்களூர் அணிக்காக விளையாடி தனது வேகப்பந்து வீச்சால் முன்னணி வீரர்களை திணறடித்த நவ்தீப் சைனி ஐபிஎல் தொடரில் 11 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Indian cricket team

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியின் முதன்மை வேகப்பந்துவீச்சாளர் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் நவ்தீப் சைனிக்கு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. ஐபிஎல் தொடரில் அனைவரையும் கவர்ந்தது போல் சர்வதேச அளவிலும் திறமையை நிரூபிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.