தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
இந்திய பெருஞ்சுவர் ராகுல் ட்ராவிட்டிற்கு உயரிய பதவி! பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
1990களின் பிற்பகுதியிலும், 2000 முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலும், இந்திய கிரிக்கெட் அணி விளையாடிய போட்டிகளில் அணி தடுமாறிக் கொண்டிருக்கும்போது, பெரும்பாலானோர் கேட்கும் ஒரு முக்கிய கேள்வி , ராகுல் டிராவிட் இன்னமும் களத்தில் உள்ளாரா என்பதுதான்.
இந்திய அணியில் பல நட்சத்திர பேட்ஸ்மேன்கள், அதிரடி ஆட்டக்காரர்கள் இருந்தபோதிலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றி தேடித்தருவது, டெஸ்ட் போட்டிகளில் தோல்விகளை தவிர்ப்பது ஆகியவை ராகுல் டிராவிட்டால் மட்டுமே சாத்தியம் என்ற திடமான நம்பிக்கையே இந்த கேள்வியின் பின்னணியாக இருந்தது.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் ஆகிய இரு வடிவங்களிலும் 10,000 ரன்களை கடந்தவர், டெஸ்ட் போட்டிகளில் அதிக அளவு கேட்ச்கள் (210) பிடித்தவர் என்று பல சாதனைகள் டிராவிட் வசம் உள்ளன. தனது அற்புத தடுப்பாட்டத்தால் 'வால்' (தடுப்புச் சுவர்) என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் விமர்சகர்களால் அழைக்கப்பட்டார்.
இத்தகைய சிறப்புமிக்க ராகுல் டிராவிட் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான தேசிய அணியின் பயிற்சியாளராக இத்தனை நாட்கள் இருந்து வந்தார். இவருக்கு தற்போது பிசிசிஐ இந்திய தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பதவியை கொடுத்து கௌரவித்துள்ளது.
இவர் இந்திய அளவில் உள்ள அனைத்து ஆண், பெண் கிரிக்கெட் வீரர்களுக்கு சிறந்த ஆலோசகராகவும், பயிற்சியாளராகவும் செயல்படுவார். மேலும் அனைத்து வகையான அணிகளின் பயிற்சியாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு இந்தியாவில் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
📰📰 Announcement 🚨🚨
— BCCI (@BCCI) July 8, 2019
Rahul Dravid appointed as Head Cricket of National Cricket Academy
Read Full details here➡️➡️ https://t.co/sYUIKzsFsH pic.twitter.com/Tf8C4QfyX4