மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இரண்டாவது அரையிறுதியிலும் மழை! இந்தமுறை யாருக்கு சாதகமாக அமையும்?
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலககோப்பை தொடரில் இன்னும் 2 ஆட்டங்களே மீதமுள்ளன. அதில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் இரண்டாவது அணி எது என்பதை தீர்மானிக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று பிரிமிங்காமில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் மோதுகின்றன. சொந்த மண்ணில் இங்கிலாந்து அணி முதல் உலகக்கோப்பையை கைப்பற்றும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால் முதல் அரையிறுதியை போலவே இரண்டாவது அரையிறுதி போட்டியும் மழையால் பாதிக்கப்படும் என வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே மழையின் காரணமாக முதல் அரையிறுதி ஆட்டம் இரண்டாவது நாளில் தலைகீழாக மாறியது. இந்நிலையில் இன்று ஆட்டம் நடைபெறும் பிரிமிங்காமில் மதியத்திற்கு மேல் மழை மிதமாக பெய்ய துவங்குமாம்.
பின்னர் இடியுடன் சற்று கனமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை அறிக்கை வெளியாகியுள்ளது. இதனால் இந்த போட்டியும் இரண்டாவது நாளைக்கு தள்ளிப் போக வாய்ப்பு உள்ளது. அவ்வாறு நடந்தால் எந்த அணி வெற்றிபெறும் என்பதை கடைசிவரை கணிக்க முடியாத நிலை உருவாகும். இதற்கு காரணம் மழைக்கு பின்பு பிட்ச்சின் தன்மை மாறுவது தான்.