மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஐ.பி.எல் லில் இன்று ராஜஸ்தான் vs பஞ்சாப்!!.. வெற்றியை தொடரப் போவது யார்..?!!
இன்று நடைபெறும் 8 வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
கடந்த 2008 ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 7 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியில் இன்று நடக்கும் 8 வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் தனது முதல் போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அந்த போட்டியில் ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால், கேப்டன் சஞ்சு சாம்சன் வரிசையாக அரைசதம் விளாசி அசத்தினர். இதன் மூலம் ராஜஸ்தான் அணி 200 ரன்களை கடந்தது. பேட்டிங் மட்டுமின்றி பந்து வீச்சிலும் மிரட்டிய ராஜஸ்தான், ஐதராபாத்தை 131 ரன்களில் கட்டுப்படுத்தியது.
ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி தனது தொடக்க போட்டியில் 7 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் அந்த அணியின் கேப்டன் தவான் (40 ), பானுகா ராஜபக்சே (50) எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர்.
இவ்விரு அணிகளும் தங்களது தொடக்க போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால், 2 போட்டியிலும் வெற்றி பெற மல்லுக்கட்டுவார்கள். இதனால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் 24 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 10 போட்டியில் பஞ்சாப் அணியும், 14 போட்டியில் ராஜஸ்தான் அணியும் வெற்றி பெற்றுள்ளன.