மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தொடர் வெற்றிக்கு முட்டுக்கட்டை போடுமா லக்னோ..?!! ராஜஸ்தான் அணியுடன் இன்று மோதல்..!!
ஜெய்ப்பூரில் இன்று நடைபெறும் 26 வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 25 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. ஜெய்ப்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 26 வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
ராஜஸ்தான் ராயல்ஸ் அனி இதுவரை 5 போட்டிகளில் பங்கேற்று ஐதராபாத், டெல்லி, சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு எதிராக தலா 1 வெற்றியும் பஞ்சாப் அணிக்கு எதிராக ஒரு தோல்வியும் பெற்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 5 போட்டிகளில் பங்கேற்று டெல்லி, ஐதராபாத் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு எதிராக தலா 1 வெற்றியும், சென்னை, பஞ்சாப் அணிகளுக்கு எதிராக 1 தோல்வியும் பெற்று 6 புள்ளிகளுடன் 2 வது இடத்தில் இருக்கிறது.
இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் மோதிய 2 போட்டிகளிலும் ராஜஸ்தான் அணியே வெற்றி பெற்றுள்ளது அந்த அணிக்கு கூடுதல் பலமாகும். நடப்பு தொடரில் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து வரும் ராஜஸ்தான் அணிக்கு லக்னோ அணி முட்டுக்கட்டை போடுமா? என்ற எதிர்பார்ப்பு லக்னோ ரசிகர்களிடையே எழுந்துள்ளது.