ஆப்கானிஸ்தான் சுதந்திர தினநாளில் பந்துவீச்சாளர் ரஷித் கான் போட்ட டுவீட்.! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.!



rasith khan tweet about independence day

தலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுவதுமாக கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் தலிபான்களுக்கு பயந்து வெளிநாட்டவர்களும், சொந்த நாட்டவர்களுமே நாட்டை விட்டு வெளியேற முயற்சித்து வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் பெரும்பகுதியை தலிபான்கள் கைப்பற்றிவிட்ட நிலையில் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி மற்றும் துணை அதிபர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.

தாலிபான்கள் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் மீண்டும் வந்துள்ள நிலையில், அந்நாட்டு மக்கள் தங்களுடைய 102வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறார்கள். தாலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ளதால் அங்கு ஜனநாயகமற்ற ஒரு வித அமைதியற்ற சூழல் தற்போது நிலவி வருகிறது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் சுதந்திர தினத்தையொட்டி அவரது ட்விட்டர் பக்கத்தில் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதில், "நம்முடைய தேசம் குறித்து மதிப்பீடு செய்ய சிறிது நேரம் எடுத்துக் கொள்வோம். தியாகங்களை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். அமைதியான, மேம்பட்ட மற்றும் ஒற்றுமையான நாட்டிற்காக நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்வோம்" என குறிப்பிட்டுள்ளார்.